ஆஸ்கர் நாயகன் ஸ்டுடியோவில் ரஜினியின் ‘பேட்ட’ ஷூட்டிங் 


ஆஸ்கர் நாயகன் ஸ்டுடியோவில் ரஜினியின் ‘பேட்ட’ ஷூட்டிங் நடைபெற்று வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பேட்ட’. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்றுதான் வெளியானது. அதனையொட்டி ட்விட்டரில் அது ட்ரெண்ட் ஆனது. ‘ரஜினி படத்தை இயக்குவது என் வாழ்நாள் கனவு’ என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் டார்ஜினிங் பகுதியில் நடைபெற்றது. மேலும் சில பகுதிகளில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. 

இந்நிலையில் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஆஸ்கர் நாயகன் தனக்கு சொந்தமான ஏ.ஆர்.ரஹ்மான் கார்டனில் YM என்று ஒரு மாடர்ன் ஸ்டுடியோவை கட்டியுள்ளார். அதில் சர்வதேச தரத்திற்கு இணையாக பல படப்பிடிப்பு தளங்கள் உள்ளன. 250 நபர்களுக்கு மேல் தங்கி பணியாற்றும் அளவுக்கு மிக பிரம்மாண்டமான ஸ்டுடியோ இது. இந்த ஸ்டுடியோவில்தான் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘2.0’ படத்தின் காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS