படப்பிடிப்பில் விபத்து: நடிகை அடா சர்மா காயம்


படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகை அடா சர்மா காயமடைந்தார்.

தமிழில், ’இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு ஆடியவர் அடா சர்மா.  இந்தியில், ’1920’, ‘பீர்’, ’ஹார்ட் அட்டாக்’ , ’கமாண்டோ 2’ உட்பட சில படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் இப்போது ’கமாண்டோ 3’ படத்தில் நடித்துவருகிறார். இதன் முதல் இரண்டு பாகங்களில் ஹீரோவாக நடித்த வித்யூத் ஜாம்வால் இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். இவர் தமிழில் அஜீத்தின் ’பில்லா 2’, விஜய்யின் ’துப்பாக்கி’, சூர்யாவின் ’அஞ்சான்’ படங்களில் நடித்தவர். ஆதித்யா தத் இயக்குகிறார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்துவருகிறது. 

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் காரில் ஏறி கதவை அடைப்பது போல காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவர் கைவிரல், கார் கதவுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் வலியால் துடித்தார் அடா சர்மா. பின்னர் கதவை திறந்த கைவிரலை வெளியே எடுத்தனர். அதற்குள் ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஓய்வெடுத்து வருகிறார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

POST COMMENTS VIEW COMMENTS