“ரஜினி படம் பண்ணுவது என் கனவு” - ‘பேட்ட’கார்த்திக் சுப்புராஜ் பேட்டி


நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் எடுப்பது தன்னுடைய கனவு என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதில் அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “என் வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள். நான் சின்ன வயசுல இருந்தே ரஜினிகாந்த் ரசிகன். நான் சினிமாவிற்கு வந்ததற்கே ரஜினிகாந்த்தான் காரணம். அவரை வைத்து ஒரு படம் இயக்குகின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது என்னுடைய கனவு. இந்தப் படத்தின் ஷூட்டிங்கை 3 மாசத்திற்கு முன்னால் ஆரம்பிச்சோம். இன்னமும் சூப்பரா போயிகிட்டு இருக்கு. சொல்லவே வேண்டாம் தலைவர் கிங் ஆஃப் ஸ்டைல். அவருடைய கரீஷ்மா, ஸ்கிரீன் பிரசண்ட் எல்லாவற்றையும் வைத்து கொண்டு சூப்பரா கலக்கிக்கிட்டு இருக்காரு. 

இந்தப் படம் தலைவருடைய 165வது படம். இத்தனை நாளாக இந்தப் படத்தின் தலைப்பையோ, படங்களையோ நாங்க வெளியிட வில்லை. பொறுமையாக இதற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகமிக நன்றி. இன்று நாங்க வெளியிட்டிருக்கும் மோஷன் போஸ்டரை பார்க்கும் போது உங்கள் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும்னு நினைக்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பு ‘பேட்ட’. மிகச் சிறப்பான டைட்டில். சீக்கிரமே இந்தப் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு படத்தை திரைக்கு கொண்டுவர இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS