ரஜினி படத்தின் டைட்டில் “பேட்ட”


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘காலா’ மற்றும் ‘2.0’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடிக்கின்றனர். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

        

பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் ‘தலைவர்165’ என்ற ஹேஷ்டேக் போட்டு குறிப்பிடப்பட்டு வந்தது. 

          

இந்நிலையில், இப்படத்தின் பெயர் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு “பேட்ட” என்று பெயர் இடப்பட்டுள்ளது.

“பேட்ட” பட தலைப்பின் மோஷன் பிக்சர் வெளியாகியுள்ளது. அதில், ரஜினி புதிய கெட்டத்தில் இருக்கிறார். அவரது தோற்றம் இளமையும், முதுமையும் கலந்தது போல் உள்ளது.

        

மேலும் தாடியுடன் இருக்கிறார். ஒரு பெரிய அரண்மனை போன்ற வீட்டின் கதவுகள் திறக்கப்பட அதில் ரஜினி கையில் ஒரு ஆயுதத்துடன் வருகிறார். அறை முழுவதும் காகிதங்கள் பறந்து கொண்டிருக்கிறது.

        

POST COMMENTS VIEW COMMENTS