பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்!


பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடக்கிறது. 

பிருத்விராஜ் நடித்த ’ஜே.சி.டேனியல்’ படத்தில் இடம்பெற்ற ’காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் மலை யாள பாடகி, வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர், அடுத்து ’வீர சிவாஜி’ படத்தில் ’சொப்பன சுந்தரி நான் தானே’, ’என்ன மோ ஏதோ’ படத்தில் ’புதிய உலகை புதிய உலகை’ உட்பட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளத்தில் தனது வித்தியாச மான குரல் மூலம் பிரபலமான இவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதை விஜயகுமார் இயக்குகிறார்.  விஜயலட்சுமியாக, மீன் விற்றுப் படிக்கும் மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார்.

Read Also -> மீண்டும் அப்பா ஆகிறார் திலீப்!

இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக தனது திருமணம் நின்றுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அனூப், இன்டீரியர் டெக்கரேஷன் கான்ட்ராக்டராகவும் இருக்கிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வரும் 10-ம் தேதி விஜயலட்சுமியின் வீட்டில் நடைபெறு கிறது. திருமணம் அக்டோபர் 22-ம் தேதி வைக்கம் மகாதேவ கோயிலில் நடக்கிறது.
 

POST COMMENTS VIEW COMMENTS