நடிகர் வெள்ளை சுப்பையா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்


மூத்த நடிகர் வெள்ளை சுப்பையா மறைவிற்கு நடிகர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. 

மூத்த திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா. இவருக்கு வயது 74. உடல்நல குறைவால் நேற்று கோவை, மேட்டுபாளையத்தில் அவர் காலமானார்.  அவரது  மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. அச்சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 


“நடிகர் வெள்ளை சுப்பையா ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘கரகாட்டக்கரன்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்து தனி முத்திரை பதித்தவர். நடிகர் வெள்ளை சுப்பையா, நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர். அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில்  ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பதாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்" என கூறியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS