இளம் நடிகர் மனைவி தற்கொலை: காரணம் என்ன?


இளம் நடிகர் ஒருவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

நடிகர் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம்‘யாகாவாராயினும் நாகாக்க’. இந்தப் படத்தினை இயக்கியவர் சத்திய பிரபாஸ். இதில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த இந்தத் திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றியிருந்தது. இந்தப் படத்தில் ஆதிக்கு நண்பராக நடித்திருந்தார் சித்தார்த் கோபிநாத். பெரிய அளவுக்கு கவனம் பெற்ற நடிகராக இவர் இல்லை என்றாலும் அடையாளம் தெரியும் அளவுக்கு இருந்தது இவரது கதாப்பாத்திரம். 

இந்நிலையில் இவரது மனைவி ஸ்மிரிஜா கடந்த செவ்வாய் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே சில மாதங்களாகவே குடும்பத் தகராறு நிலவி வந்ததாகவும் ஆகவே அதில் மனம் உடைந்து ஸ்மிரிஜா தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட செய்தி புதன்கிழமை காலையில்தான் தெரிய வந்துள்ளது.

இவரது மரணம் சம்பந்தமாக ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் மரணத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக உடல் எடுத்து செல்லப்பட்டுள்ளது. அதன் பிறகே உரிய விவரம் தெரிய வரும் என்கிறது காவல்துறை வட்டாரம். இளம் நடிகர் மனைவின் மரணம் அப்பகுதி மக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Read Also -> மீண்டும் மூன்று மொழிகளில் கலக்கும் பிரபாஸ்: தொடங்கியது ஷூட்டிங் 

POST COMMENTS VIEW COMMENTS