கடைசிக்கட்ட படப்பிடிப்பு: லக்னோ சென்றார் ரஜினிகாந்த்!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று லக்னோ புறப்பட்டுச் சென்றார்.

’காலா’ மற்றும் ’2.0’ படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடிக்கின்றனர். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல் ஷெட்யூல் டார்ஜிலிங்கில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு லக்னோவில் நாளை தொடங்க இருக்கிறது.

Read Also -> அழகாக இருக்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது? புதிய தோற்றத்தில் சோனாலி பிந்த்ரே!  

(மாளவிகா மோகனன்)

இந்நிலையில் குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவர் விஜய்யை ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். விஜய், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். தன் குழந்தைகளை இழந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த விஜய்-க்கு  நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார் . இதே போல் காலா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு திரும்பும் போது விபத்தில் கால்களை இழந்த காசி விஸ்வநாதனையும் வரவழைத்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டார். 

Read Also -> பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்  

இந்நிலையில் இன்று காலை படப்பிடிப்புகாக லக்னோ புறப்பட்டுச் சென்றார். இந்த மாதம் முழுவதும் அங்கு படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் அதோடு ஷூட்டிங் முடிகிறது என்றும் கூறப்படுகிறது. பாடல் காட்சிகளுக்காக படக்குழு, ஐரோப்பா செல்ல இருக்கிறது. 

POST COMMENTS VIEW COMMENTS