7 நாளில் ’சர்கார்’ டப்பிங்கை முடித்த விஜய்!


’மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ’சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழில திபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார். விறுவிறுப்பான அரசியல் பின்னணியைக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில், பழ.கருப்பையாவும் ராதாரவியும் கொடுமைக்கார அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர்.

Read Also -> பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

மற்றும் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. பேட்ச் ஒர்க் மட்டும் பாக்கி இருக்கிறது.

இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏழே நாளில் தனது டப்பிங்கை முடித்திருக்கிறார் விஜய். இதையடுத்து அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

Read Also -> அழகாக இருக்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது? புதிய தோற்றத்தில் சோனாலி பிந்த்ரே!  

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளதால் இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS