மேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..!


‘செக்க சிவந்த வானம்’ பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு மேடையை விட்டு இறங்கி ஓடினார்.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் ஒவ்வொருவராக பேசினார். படத்தில் நடித்துள்ள நடிகர் சிம்புவும் மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையில் இறைவனுக்கு வணக்கம். தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் வணக்கம் என பேச்சை தொடங்கினார் சிம்பு. இதனால் சிம்பு நிறைய பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேடையில் ஆசிரியர்கள் தின வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்ட சிம்பு இயக்குநர் மணிரத்தினத்திற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இப்போது பேசுவதை விட படம் பேசும் என சொல்லிவிட்டு அதிவேகமாக மேடையை விட்டு இறங்கி ஓடிவிட்டார் சிம்பு. சின்மயி சிம்புவிடம் கேள்விகளை கேட்பதற்கு முன்னதாகவே சடாரென்று கீழிறங்கி ஓடியதால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS