பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக மோகன்லால் போட்டி?


பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நடிகர் மோகன்லாலை, பாஜக சார்பில் போட்டியிட வைக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால். இவர் பாஜகவில் சேர இருப்பதாக கடந்த ஒரு வருடமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுபற்றி மோகன்லால் எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வைக்க, ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. 

Read Also -> பணம் கையாடல் புகார்: உடைகிறது தெலுங்கு நடிகர் சங்கம்? 

Read Also -> காதல் விவகாரம்: கடுப்பான ரவி சாஸ்திரி 

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் இதுபற்றி மாநில பாஜகவுக்கு எதுவும் தெரியாது என்றும் அந்த அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை மோகன்லால் நேற்று சந்தித்தார். கேரளாவின் வயநாட்டில் சர்வதேச மலையாளி வட்டமேஜை அமைப்பின் விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே இந்த சந்திப்பு என்றாலும் அவர் பாஜகவில் சேர்வதற்கான அறிகுறி இது என்றும் கேரளாவில் கூறுகின் றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS