ஹீரோக்கள் ரூ.4 கோடிக்கு கார் வச்சிருக்காங்க, ஆனா நிவாரண நிதி? ’செம்மீன்’ ஷீலா கேள்வி


ரூ.4 கோடிக்கு சொகுசு கார் வைத்திருக்கும் கேரள நடிகர்கள், சரியான அளவில் வெள்ள நிவாரண வழங்கவில்லை என்று பழம்பெரும் நடிகை ’செம்மீன்’ ஷீலா கூறியுள்ளார்.

கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியி ருந்தவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ஆனால் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் தொடர்ந்து முகாமிலேயே இருக்கின்றனர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் அதில் தங்கியிருக்கிறார்கள். அவர்களை அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை ’செம்மீன்’ ஷீலா, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை வழங்கினார்.  இவர், தமிழில், பாசம், பணத்தோட்டம், இதய கமலம், கற்பகம். சந்திரமுகி, பாலக்காட்டு மாதவன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இளம் ஹீரோக்களை சாடியுள்ளார். 

‘கேரள நடிகர்கள் சரியான அளவில் வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை. ஹீரோக்கள் குறைந்தபட்சம் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத் தையாவது வழங்க வேண்டும். நான்கு கோடி ரூபாய்க்கு சொகுசு கார் வைத்திருக்கும் ஹீரோக்கள் அதை செய்ய வேண்டும். மக்கள் கொடுத்த பணத்தால்தான் அவர்கள் வளர்ந்தார்கள். நிவாரண நிதிக்காக நட்சத்திர கலை விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் நடிகர்கள் முன் வர வேண்டும்’ என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS