ஆன்மிகம், அமெரிக்கா டூ மீண்டும் சினிமா: தனுஸ்ரீ திடீர் மாற்றம்!


ஆன்மிகத்துக்கு சென்ற நடிகை தனுஸ்ரீ தத்தா இப்போது மீண்டும் நடிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.

தமிழில், விஷாலின் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்தியில், ’ஆஷிக் பனாயா அப்னே’, ’ரிஸ் க்’, ’குட் பாய் பேட் பாய்’, ‘அபார்ட்மென்ட்’  உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆன்மிகத்தில் இறங்கினார். கோவை ஈசா மையத்தில் தியானத்தில் ஈடுபட்டு வந்த இவர், பின்னர் மொட்டையும் அடித்துக் கொண்டார். திடீரென இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அங்கு வசிக்கும் சாமியார்களை சந்தித்து பேசினார். அவரும் சாமியாராக போகிறார் எனக் கூறப்பட்டது.

Read Also -> ரஜினியுடன் இணையும் ‘ஜோக்கர்’ ஹீரோ  


 ‘சினிமா வாழ்க்கை என்னை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியது. சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு மொட்டை அடித்தேன்’ என்று கூறியிருந்தார், அப்போது.

இதையடுத்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், கடந்த 2 வருடத்துக்கு முன் அமெரிக்காவுக்கு சென்றார். ஜூலை மாதம் மும்பை திரும்பிய அவர், முழுவதுமாக மாறி இருக்கிறார். இந்நிலையில் தனது முடிவை மாற்றிக்கொண்ட தனுஸ்ரீ, நடிக்க சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக பாலிவுட் இயக்குனர்களிடம் போனிலும் நேரிலும் வாய்ப்பு கேட்டு வருகிறார். 


 

POST COMMENTS VIEW COMMENTS