இறுதிக் கட்டத்தில் ’எனை நோக்கி பாயும் தோட்டா’


கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் படம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. ராணா, சுனேனா ஆகியோரும் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசை அமைக்கிறார். வெளியாகியுள்ள இந்தப் படத்தின், விசிறி, மறுவார்த்தை பேசாதே ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் இயக்குனரும் நடிகருமான சசிகுமார். அவர் தனுஷுக்கு அண்ணனாக நடித்துள்ளதாகக் கூறப்ப டுகிறது.

இதுபற்றி சசிகுமார் கூறும்போது, ’தனுஷ், கவுதம் மேனன் படம் என்பதால் இதில் நடிக்க சம்மதித்தேன். கெஸ்ட் ரோல்தான் என்றாலும் படத்தி ல் முக்கியத்துவம் இருக்கிறது. தனுஷூடன் நடித்தது இனிமையான அனுபவமாக இருந்தது.

 அதோடு கவுதம் வாசுதேவ் மேனன் ஸ்டைலிஷ் இயக்குனர். அவர் இயக்கத்தில் நடித்ததும் வித்தியாசமாக இருந்தது. இன்னும் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. அங்குள்ள உயரமான கட்டிடத்தின் உச்சியில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் சசிகுமார், மேகா ஆகாஷ் நடித்து வருகின்றனர். நேற்று இரவு படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கவுதம் வாசுதேவ் மேனன், ’நள்ளிரவு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம்’ எனக் கூறிவிட்டு, சசிகுமாரை பாராட்டியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS