சிம்புவும் டயானாவும் ! செக்கசிவந்த வானம் 'ஷூட்டிங்' புகைப்படம் வெளியீடு


மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்கச்சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

'காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் திரைப்படம், 'செக்கச்சிவந்த வானம்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், ஜோதிகா, இந்தி நடிகை அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படப்பிடிப்புதளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் சிம்பு மற்றும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் டயானா ஹெரப்பாவுக்கு இயக்குநர் மணிரத்னம் காட்சிகளை விளக்குவதுமாதிரியான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம், செப்டம்பர் 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.  


 

POST COMMENTS VIEW COMMENTS