நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' வெளியாவதில் சிக்கலா ?


நயன்தாரா நடித்துள்ள  'இமைக்கா நொடிகள்' படம் இன்று வெளிவருவதாக அறிவிதிருந்த நிலையில் படம் இன்னும் வெளியாகவில்லை 
 
நயன்தாரா, அதர்வா, ஆகியோர் நடித்துள்ள படம்  ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்தை ‘டிமான்ட்டி காலனி’  இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அத்துடன் பாலிவுட் இயக்குநரும் நடிகரான அனுராக் கஷ்யப் இப்படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.

Read Also -> இளம் சூப்பர் ஸ்டார்கள் எங்கே போனார்கள்? ஹீரோக்களை சாடிய அரசியல்வாதி நடிகர்! 

                           

மேலும் இப்படத்தில் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் இன்று வெளிவருவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் இன்னும் வெளியாகவில்லை. பட தயாரிப்பாளரின் பண பிரச்சனை காரணமாக படம் இன்னும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாகவும் இன்று மாலைக்கு மேல் பிரச்சனை தீர்ந்து படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

POST COMMENTS VIEW COMMENTS