இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசியதாக பிரகாஷ் ராஜ் மீது வழக்கு!


இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரண் என்பவர், நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூர்  4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அதில், ‘நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு பேசும்போது, இந்து மதத்தையும் இந்துகடவுள்கள் மற்றும் வழிபாடுக ளையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்துக்கள், கடவுள்களாக போற்றி வணங்கும் பசுவையும் விமர்சனம் செய்து வருகிறார். அவரது பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறது.

தொடர்ந்து இதுபோன்று பேசிவரும் அவர் மீது சட்டப்படி நவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 25-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS