உருவாகிறது மோகன் ராஜா, ஜெயம் ரவி டீமின் 'தனி ஒருவன் 2'!


தனது அடுத்தப் படம் ’தனி ஒருவன் 2’ என்று இயக்குனர் மோகன் ராஜா கூறியுள்ளார்.

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா, தம்பி ராமையா உட்பட பலர் நடித்து ஹிட்டான படம் தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கியிருந்த இந்தப் படம் 2015 ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 3 வருடம் ஆகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதை உறுதிப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.

Also Read -> தற்கொலைதான் தீர்வா? கொதித்து எழுந்த மஞ்சு வாரியர்! 

இது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மோகன் ராஜா. அதில் அவர், ‘தனி ஒருவன் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்தப் படத்துல சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி. அந்த படத்துக்கு இது மூன்றாம் ஆண்டு. எனது அடுத்தப் படம் ’தனி ஒருவன் 2’தான். ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். இதுவும் நல்ல படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Read Also -> இயக்குனர் பிரியதர்ஷனுக்கு கிஷோர் குமார் விருது!

இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை தொடங்கிவிட்டார் மோகன் ராஜா. டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரி கிறது.

POST COMMENTS VIEW COMMENTS