ஹிர்த்திக் ரோஷன் மீது சென்னை போலீஸ் மோசடி வழக்குப்பதிவு


பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் மீது சென்னை போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹிர்த்திக் ரோஷன் தவிர 8 பேர் மீதும் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முரளிதரன் என்பவர் சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், குர்கானை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் ஸ்டாக்கிஸ்ட்டாக தாம் பணியமர்த்தப்பட்டதாக கூறியுள்ளார். இதனை விளம்பரப்படுத்தும் வேலையை ஹிர்த்திக் ரோஷன் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே நிறுவனம் பொருட்களை சரியான நேரத்தில் வழங்கவில்லை எனவும் விளம்பர பிரிவை தனக்கு தெரியாமல் கலைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் முரளிதரன். இதனால் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் குடோனிலே உள்ளது. எனவே தேக்கமடைந்துள்ள பொருட்களின் ஒரு பகுதியை நிறுவனத்திற்கு திருப்பி அளித்தபோது அவர்கள் பணத்தை திரும்பித் தர தயாராக இல்லை. குடோனில் பொருட்களை வைத்துள்ளதால் வாடகைக்கான பணம் மற்றும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் என 21 லட்சத்தை அவர்கள் தரவில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக ஹிர்த்திக் ரோஷன் மற்றும் 8 பேர் மீது கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS