டாப்ஸிக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் ராம்போ ராஜ்குமார் மகள்கள்!


மறைந்த பிரபல சண்டை இயக்குனர் ராம்போ ராஜ்குமாரின் மகள்கள் அனுராக் காஷ்யப் இயக்கும் இந்திப் படம் மூலம் நடன இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

பிரபல சண்டை இயக்குனர் ராம்போ ராஜ்குமார். ரயிலுக்கு நேரமாச்சு படம் மூலம் சண்டை இயக்குனராக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் முன்னணி ஹீரோக்களில் படங்களுக்கு பணியாற்றியுள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது மகன் நவகாந்த். மகள்கள் நவலட்சுமி, நவதேவி. இதில் நவலட்சுமியை, நடிகர் ரமேஷ் திலக் திருமணம் செய்துள்ளார். 

Read Also -> அம்மா, அப்பாவுடன் ஒப்பிடலாமா? ஸ்ருதிஹாசன்

நவலட்சுமியும் நவதேவியும் நடனக் கலைஞர்கள். சிறுவயதிலேயே நடனத்தில் ஈடுபாடு கொண்ட இவர்கள், இப்போது இந்தி படம் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகின்றனர்.  அனுராக் காஷ்யப் இயக்கும் இந்தி படம், ’மன்மர்ஸியான்’. இதில் அபிஷேக் பச்சன், விக்கி கவுசல், டாப்ஸி உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்காக பாங்க்ரா நடனம் ஒன்று இடம்பெறுகிறது. இந்த நடனத்தை நவதேவியும் அவரது சகோதரி நவலட் சுமியும் அமைக்கிறார்கள். இதன் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகிறார்கள்.

Read Also -> ’ஜேம்ஸ்பாண்டை இறக்கச் சொல்வதா?’ விலகினார் இயக்குனர் டேனி பாய்ல்!

(அனுராக், டாப்ஸியும் நவலட்சுமி, நவதேவி)

இதுபற்றி அனுராக் காஷ்யப் கூறும்போது, ‘தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நவதேவியின் நடனத் தைப் பார்த்தேன். அப்போதுதான் அவர் ராம்போ ராஜ்குமார் மகள் என்பது தெரியவந்தது. அப்போது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமன் னாவுடன் அவர் நடனம் ஆடினார். அது பிடித்திருந்தது. பிறகு இந்தப் படத்துக்கு நடன இயக்குனராகி விட்டேன். இந்த நடனம் நிச்சயம் வித்தி யாசமாக இருக்கும்’ என்றார்.

டாப்ஸி கூறும்போது, ‘இது பஞ்சாபி பாடல். இதே போன்ற பாடல்கள் இந்தியில் பல படங்களில் வந்துவிட்டன. அதிலிருந்து மாறுபட்டு எடுக்க வேண்டும் என்று அனுராக் நினைத்தார். இதையடுத்து அவர்களை அழைத்து வந்தார். அவர்களின் நடன அமைப்பு சிறப்பாக இருக்கிறது. கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும்’ என்றார்.
 

POST COMMENTS VIEW COMMENTS