அக்டோபர் 2 ‘சர்கார்’ இசை வெளியீடு


விஜய்யின் ‘சர்கார்’ இசை வெளியீடு நிகழ்ச்சி அக்டோபர் 2 அன்று நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படத்தின் வேலைகள் ஏறக்குறைய முழுமை பெற்றுவிட்டது. அதனை அடுத்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டை நடத்த படக்குழு திட்டமிட்டு வந்தது. செப்டம்பர் 13 அன்று விநாயகர் சதூர்த்தி அன்று இசை வெளியீடு நடைபெறலாம் என தகவல் கசிந்தது.

இந்நிலையில் இன்று மாலை மிக முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளதாக ‘சர்கார்’ படக்குழு அறிவித்திருந்தது. அதனையொட்டி வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் அவரது ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட பாடல் ஒன்றிற்கு விஜய் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் லீக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS