'சண்டக்கோழி 2' படக்குழுவுக்கு தங்க நாணயம் பரிசு!


’சண்டக்கோழி 2’ படக்குழுவினருக்கு படத்தின் ஹீரோவும் இயக்குனர் தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளனர்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ’சண்டக்கோழி’. 2005-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், இப்போது உருவாகிறது. விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

Read Also -> டிவி. தொடருக்கு வந்தார் ஜெயப்பிரதா!  

 

 

மற்றும் ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகின்றன.இந்நிலையில் ’சண்டக்கோழி 2’ படக்குழுவினருக்கு படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தங்கம் பரிசாக வழங்கினார்.

Read Also -> ஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை!  

அவரைத் தொடர்ந்து ஹீரோ விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோரும் படக்குழுவினர் சுமார் 150 பேருக்கு தனித்தனியாக தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளனர். மேலும் அனைவருக்கும் விருந்தளித்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 18 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. 

மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.2 லட்சத்தை அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு லிங்குசாமி வழங்கியுள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS