ஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை!


ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அசல் காய்கறி விற்கும் பெண்ணாக மாறினார் நடிகை அடா சர்மா.

தமிழில், ’இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு ஆடியவர் அடா சர்மா. தமிழ்ப் பெண்ணான அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

இந்தியில், ’1920’, ‘பீர்’, ’ஹார்ட் அட்டாக்’ உட்பட சில படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர், இப்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான ஸ்கீரின் டெஸ்ட் சமீபத்தில் நடந்துள்ளது. 

காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்கும் பெண்ணாக அவர் இருப்பது போல டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த கேரக்டரில் அவர் அப்படியே பொருந்தியிருக்கிறார். மாடர்ன் பெண்ணான அடா, அசல் காய்கறி கடை பெண்ணாக மாறி இருப்பதற்கு பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் இப்போது வைரலாகி வருகின்றன.

POST COMMENTS VIEW COMMENTS