“ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது சவால்தான்” - கீர்த்தி சுரேஷ்


முன்னாள் முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது சவாலான விஷயம் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் ஆடையகத்தின் விளம்பர தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிமுக விழா சென்னை திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசும்போது, “கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் வழங்க நினைப்பவர்கள் உணவு பொருட்கள் மற்றும் பாத்திரங்களாக கூட அனுப்பி வைக்கலாம்” என்றார். மேலும் “ஜெயலலிதா அவர்களின் வரலாற்று படத்தை தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவலான விஷயம்”என்றார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்க்கையை படமாக எடுக்க திரையுலகில் கடும் போட்டி நிலவுகிறது. மூன்று இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்வை படமாக எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள்  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. 

POST COMMENTS VIEW COMMENTS