விஷாலின் ’அயோக்யா’வுக்கு பிரமாண்ட செட்


விஷாலின் ’அயோக்யா’ படத்துக்காக கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் ’சண்டக்கோழி 2’ படத்தில் நடித்து வந்தார் விஷால். இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. 

இதையடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு ’அயோக்யா’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி. மது தயாரிக்கிறார். வெங்கட் மோகன் இயக்குகிறார். ராஷி கண்ணா ஹீரோயின். பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார், சச்சு, வம்சி உள்பட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ்.இசை அமைக்கிறார். ஆர். கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். 

இதன் படப்பிடிப்பு, கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜி.கே.ரெட்டி, ரவிபிரசாத், காட்ரகட்ட பிரசாத், கிருஷ்ணா ரெட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
         
 


 

POST COMMENTS VIEW COMMENTS