கமலின் 'ஹேராம்' தந்த திருப்புமுனை: ராணி முகர்ஜி ஜிலீர்!


என்னை முழுவதுமாக மாற்றியவர் நடிகர் கமல்ஹாசன்தான் என்று பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி சொன்னார்.

கமல்ஹாசனுடன் ’ஹேராம்’ படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி. தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவாகி இருக்கும் அவர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசும்போது, நடிகர் கமல்ஹாசன் தான் தன்னை மாற்றினார் என்று குறிப்பிட்டார். 

Read Also -> கேரள பாதிப்பால் மனமுடைந்தேன்: ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவி!

அவர் மேலும் கூறும்போது, ‘ ஹேராம் படம்தான் எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது முழு மேக்கப்புடன் சென்றேன். என்னைப் பார்த்த கமல்ஹாசன், 'முகத்தை கழுவிட்டு வாங்க' என்று சொன்னார். நான் என் அறைக்குச் சென்று முகத்தைத் துடைத்துவிட்டு வந்தேன். மீண்டும் என்னை பார்த்த கமல்ஹாசன், மேக்கப்பை முழுவதுமாக நீக்கிவிட்டு வாருங்கள் என்றார். நான் மீண்டும் சென்று மேக்கப்பை நீக்கிவிட்டு ஒரிஜினலாக சென்றேன்.

Read Also -> விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

மேக்கப் இல்லாமல் செட்டுக்குள் இருந்தது அதுதான் எனக்கு முதல் முறை. அதன்பிறகு எனக்கு நம்பிக்கை வந்தது. ஹீரோயின்கள் மேக்கப்போடுதான் வருவதுதான் வழக்கம். ஆனால் கமல் என்னை மாற்றினார். நடிகர்கள், அவர்களது லுக், தலைமுடி, வெயிட் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அப்போதுதான் முழுமையான நடிப்பை வெளிப்படுத்த முடியும்’ என்றார். 

POST COMMENTS VIEW COMMENTS