கேரள சேதம்: மகனின் திருமணத் திட்டத்தை மாற்றிய பாடகர் உண்ணி மேனன்


தனது மகனின் திருமணத்தை எளிமையாக நடத்தி, அதற்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார், பிரபல பின்னணி பாடகர் உண்ணி மேனன்.

தமிழில், ’ரோஜா’ படத்தில் ‘புது வெள்ளை மழை இங்கு...’, 'மின்சார கனவு' படத்தில் 'மானா மதுரை மாமரத்துக் கிளியே’, ’கருத்தம்மா’ படத்தில், ’போறாளே பொன்னுத்தாயி’, ’ரிதம்’ படத்தில், ’நதியே நதியே...’ உட்பட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் மலையாள பாடகர் உண்ணி மேனன்.

இவரது மகன் அங்குர் உண்ணி. சென்னையில் ஆர்கிடெக்டாக இருக்கும் இவருக்கும் துபாயைச் சேர்ந்த கவிதாவுக்கும் கடந்த சில மாதங்க ளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. அதன்படி செப்டம்பர் 20 ஆம் தேதி திருச்சூரில் உள்ள லுலு கன்வென்சன் சென்டரில் மிகப் பிரமாண்டமாக நடத்த உண்ணி மேனன் திட்டமிட்டிருந்தார். சுமார் 2,500 பேரை அழைக்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில் கடும் மழை வெள்ளத்தால் கேரளா மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால், திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளார் .

Read Also -> விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

Read Also -> விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் : இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம்

இது பற்றி அவர் கூறும்போது, ‘கடந்த 9 மாதமாக திருமணத்துக்கான வேலைகளை செய்துகொண்டிருந்தோம். பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தோம். மாநிலமே சோகத்தில் இருக்கும்போது ஆடம்பரமாக திருமணத்தை நடத்த விரும்பவில்லை. அதனால் ஏற்கனவே முடிவு செய்திருந்த நாளில் சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் எளிமையாக நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம். திருமண செலவுக் காக வைத்திருந்த பணத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளோம். இந்த முடிவை நாங்களும் துபாயில் உள்ள காவ்யா வின் குடும்பமும் இணைந்து எடுத்துள்ளோம்’ என்றார். 
 

POST COMMENTS VIEW COMMENTS