விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!


விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அஜித் நடித்து வரும் ஆக்‌ஷன் த்ரிலர் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படம் மூலம் அஜித்துடன் 4 வது முறையாக இயக்குநர் சிவா கூட்டு சேர்ந்துள்ளார். அஜித் ஜோடியாக நயந்தாரா நடிக்கிறார். மேலும் கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா உட்பட்டவர்களும் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. 

          

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட சில மணி நேரங்களிலே அஜித் ரசிகர்கள் “விஸ்வாசம்ஃபர்ஸ்ட்லுக்” என்ற ஹேஷ் டேக்கை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானது.  

அதில், 2 அஜித் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஒன்றில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மீசையை முறுக்குவது மாதியான காட்சி இடம்பெற்றுள்ளது. மற்றொரு படத்தில் அஜித் இளமையாக காட்சி அளிக்கிறார். இதன் மூலம் அஜித் இரு கதாபாத்திரத்தில் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளனர். வயதான அஜித் தோற்றத்தை படம்பிடித்து முடித்து விட்டதாக தெரிகிறது. தற்போது அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளை படமாக்கி வருவதாக தெரிகிறது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS