விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் : இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம்


விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியாகும் என சமூக வளைத்தலங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அஜித் நடித்து வரும் ஆக்‌ஷன் த்ரிலர் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தின் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டு சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான ட்விட்களை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருவதால், ட்விட்டரின் இந்திய அளவு ட்ரெண்டிங்கில் “விஸ்வாசம்ஃபர்ஸ்ட்லுக்” ட்ரெண்டாகியுள்ளது. அத்துடன் அஜித் ரசிகர்கள் பலர் தாங்கள் சித்தரித்த புகைப்படங்களை ஃபர்ஸ்ட்லுக் போன்று வெளியிட்டு வருகின்றனர்.

இந்தப் படத்தில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் வயதான அஜித் தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர் தற்சமயம் அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் வயதான தோற்றத்தை எடுத்து வருவதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் மூலம் முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை இமான் பெற்றுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இதனை தயாரித்து வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS