ஐயெரா “சர்வதேச” விருது : சிறந்த நடிகராக விஜய் பரிந்துரை


ஐயெரா விருதுகளின் சிறந்த சர்வதேச நடிகராக நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஐயெரா (IARA) விருதுகள் எனப்படும் சர்வதேச விருதுகள் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் எனும் இரண்டு விருதுகளுக்கு விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவருடன் சர்வதேச நடிகர்கள் சிலரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மெர்சல் படத்தில் விஜய் நடிப்பிற்காக இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பரிந்துரை செய்யப்பட்டுள்ள நடிகர்களின் பெயர்களுக்கு, பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கனவே சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம் என்ற இங்கிலாந்து விருதை வென்றுள்ளது. இந்நிலையில் தான் விஜய் சிறந்த நடிகராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐயெரா (IARA) விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22ம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். 
 

POST COMMENTS VIEW COMMENTS