கேரளாவிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் : அதிர்ந்தது அரங்கம்..


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள பாடல் சமூக வலைத்தலங்களில் வைரலாகியுள்ளது. 

100 வருடங்கள் இல்லாத மழை கேரளாவில் பெய்தது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டு கேரள மாநிலம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. இதுவரை 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் சேதமடைந்துவிட்டன.  லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதிகள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கேரள மக்களுக்கு தனது பாடல் ஒன்றில் வரிகளை மாற்றிப்பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த ‘முஸ்தபா முஸ்தாபா’ பாடலை மேடையில் பாடினார். அவர் பாடலை பாடி முடிக்கும் தருணத்தில், கேரளாவிற்காக எனக்கூறி, “கேரளா.. கேரளா.. டோண்ட் வொர்ரி கேரளா.. காலம் நம் தோழன் கேரளா” எனப்பாடினார். அவர் இவ்வாறு பாடியபோது, அரங்கே அதிரும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 

POST COMMENTS VIEW COMMENTS