மத நம்பிக்கை பற்றி அப்பாவுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு: ஸ்ருதிஹாசன்!


மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவுக்கும் (கமல்ஹாசன்) வேறுபட்ட கருத்து இருக்கிறது என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

நியுயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் அப்பா கமல்ஹாசனுடன் கலந்துகொண்டார் நடிகை ஸ்ருதிஹாசன். அந்த விழாவில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸூம் கலந்துகொண்டார். இந்த விழாவில் தேசப்பற்று பாடலை பாடினார் ஸ்ருதிஹாசன். 

Also Read -> நிவாரணப் பணிகளுக்காக திருமணத்தை தள்ளி வைத்த நடிகர்!

Also Read -> நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவிற்கு நிதியுதவி 

Read Also -> நயன்தாரா பாட்டை ஆசையோடு பார்க்கிறேன்”- பாலிவுட்டில் ஒரு குரல்

இது பற்றி அவர் கூறும்போது, ‘ நான் சினிமாவில் அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகிறது. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் விருப்பப் பட்டு தேர்வு செய்து நடித்தது தான். இதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாக இருக்கிறது. எதிர் காலத்திலும் பிடித்த கேரக்டர்களிலும், கதைகளிலுமே நடிப்பேன்.

மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவுக்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை ஆன்மிக சக்தி இருப்பதாக நம்புகி றேன். அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு நேரடியான பதிலில்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன். அதே போல் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

எனக்கு திரைத்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் இந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும். நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தை யொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதையும், அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் பெருமையாக நினைக்கிறேன்’ என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS