“நயன்தாரா பாட்டை ஆசையோடு பார்க்கிறேன்”- பாலிவுட்டில் ஒரு குரல்


நயன்தாரா ‘கோகோ’ பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதோடு அதனை பாராட்டியும் உள்ளார் கரண் ஜோஹர்.

பாலிவுட் நட்சத்திரம் கரண் ஜோஹர். திரைப்பட நடிகரான இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கும் இப்படத்தின் ப்ரமோவிற்காக ‘கன் இன் காதல்’ பாடல் வீடியோவை வெளியிட்டிருந்தது படக்குழு. இந்தப் பாடலை எழுதி இயக்கி இருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இந்த வீடியோவின் காட்சிகள் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருந்தன. ரவிவர்மன் கைவண்ணத்தில் உருவான இந்தக் காட்சிகள் சர்வதேச தரத்தில் மிளிர்ந்தன. இந்த வீடியோவை  பாலிவுட் நடிகர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அதில், “ஆசையுடன் பல தடவை ‘கோலமாவு கோகிலா’ பாடல் வீடியோவை பார்த்தேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் அந்தப் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டிருக்கிறார்.  

POST COMMENTS VIEW COMMENTS