பாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’


விஜய்யின் ‘கத்தி’ படம் பாலிவிட்டில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘கத்தி’. விஜய் நடிப்பில் உருவான இந்தப் படத்திற்கு எதிராக பெரிய சர்ச்சை எழுந்தது. சில அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. படத்தை வெளியிட முடியாமல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதிக சிரமத்திற்கு ஆளானார். சில சமரச முயற்சிகளுக்குப் பிறகு படம் வெளியானது. இதில் ஜீவானந்தம், கதிரேசன் ஆகிய இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை படம் பெற்றது. 

இந்நிலையில் விஜய் நடித்த ‘கத்தி’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான  உரிமையை சஞ்சய் லீலா பன்சாலி வாங்கியுள்ளார். இவர் ‘ரெளடி ரதோர்’, ‘காப்பர் இஸ் பேக்’ போன்ற படங்களை தயாரித்தவர். பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய ‘பத்மாவத்’ படத்தின் இயக்குநரும் இவர்தான். இதனிடையே ‘கத்தி’ ரீமேக்கில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பது குறித்த விவரங்களை விரைவில் படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர். தமிழில் விஜய் நடித்த பார்த்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

POST COMMENTS VIEW COMMENTS