வாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை ! நடிகர் சங்கம்


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில்  நடிகர் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தக் கூட்டத்தில், நடிகர் சங்க கட்டிடம் கட்டுமான பணிகள் முடியும் வரை அடுத்த 6 மாதங்களுக்கு தேர்தல் இல்லை என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. வரும் அக்டோபர் மாதத்துடன் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Read Also -> நிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்!

Read Also -> கேன்சரில் பாதித்த நடிகை சுஜாதா குமார் மரணம்!  

Read Also ->  ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யா ராய், அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை!

இதனிடையே, நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றவில்லை என புது சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென நடிகர் சங்க உறுப்பினரும் பாஜக கலை அணி செயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது” என்று கூறியிருந்தார்.

                         

                   

Read Also -> “வாஜ்பாய்க்கு இரங்கல் இல்லையா!” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம் 

Read Also -> ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்! 

இந்நிலையில், தமிழிசையின் குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் உதயாவிடம் கேட்ட போது, “வாஜ்பாய் சிறந்த தேசிய தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். கருணாநிதி நடிகர் சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினர். அதனால் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினோம். வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று எந்த உறுப்பினரும் கோரிக்கை விடுக்கவில்லை. நடிகர் சங்கத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என்றார். 

POST COMMENTS VIEW COMMENTS