கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி 


மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விக்ரம் 35 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். 

கேரளாவில் கடந்த சில நாட்களாக, வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. பெருமழை மற்றும் வெள்ளத்தால் 19 ஆயிரத்து 512 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்திற்கு பல அண்டை மாநிலங்களும் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த பல முண்ணனி நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விக்ரம் 35 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் வங்கி கணக்கிற்கு 35 லட்சம் ரூபாயை காசோலையாக அவர் வழங்கியுள்ளார். மேலும் கேரளாவில் இயப்பு நிலை திரும்பி மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட வேண்டுவதாகவும் நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

POST COMMENTS VIEW COMMENTS