காயத்துடன் உதவி: அமலா பாலுக்கு குவியும் பாராட்டுகள்!


கையில் ஏற்பட்ட காயத்துடன் நிவாரண உதவிகள் வழங்கிய நடிகை அமலா பாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார் அமலா பால். இதன் படப்பிடிப்பின்போது அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் கையில் கட்டு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்களை அவரே கடைகளுக்கு சென்று வாங்கினார். வெள்ளச் சேதம் பாதித்த இடங்களுக்கு சென்று அதை நேரில் வழங்கினார். இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

காயத்துடன் நிவாரண உதவிகளை செய்த அமலாபாலின் மனிதாபிமானத்தை சமூக வலைத்தளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS