ரசிகர்களுக்கு ஒரேநாளில் விஜய்யும் அஜித்தும் ட்ரீட்? 


விநாயகர்சதூர்த்தி அன்று விஜய்யின் ‘சர்கார்’ பட டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக இந்தப் படக்குழு சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தது. அங்கே விஜய்யின் ஓபனிங் சாங் காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே படமாக்கப்பட்ட ‘ரா..ரா..ராட்சசன்’ பாடலின் வீடியோ ஒன்று படக்குழுவினருக்கு தெரியாமல் சமூக வலைத்தளத்தில் லீக் ஆனது. அதனைக் கண்டு படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில்‘சர்கார்’படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர்சதூர்த்தி அன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதே தேதியில் அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகலாம் என தெரிகிறது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே மீண்டும் ஒரு போட்டி எழும் சூழல் உருவாகியுள்ளது. இருவரின் ரசிகர்களும் இந்தப் பண்டிகை நாளில் மோதிக் கொள்ள இப்போதே தயாராகி வருகின்றனர். அன்றைய நாள் சமூக வலைத்தளம் அனல் பறக்கும் களமாக மாற உள்ளது என்றே தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS