வரும் ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு ரத்து!


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால் அன்று சென்னையில் மட்டும் படப்பி டிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் முக்கிய முடி வுகள் எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு நடிகர், நடிகைகள் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க  வசதியாக அன்று படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கம் கோரிக்கை வைத்தது.

இதை ஏற்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் சென்னையில் மட்டும் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளது. இத்தகவலை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS