அப்பாவுக்காக களத்தில் குதித்த ராஜமவுலி மகன்!


இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த படத்துக்காக, அவரது மகன் கார்த்திகேயா களத்தில் குதித்துள்ளார்.

’பாகுபலி’ சூப்பர் டூப்பர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படத்தில் ராம் சரண் தேஜாவும் ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கின்றனர். இதுவும் மெகா பட்ஜெட் படம் என்று கூறப்படுகிறது. ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குகிறது. இதற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

 

Also Read: நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு! 

இந்நிலையில் இந்தப் படத்துக்காக மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, கேரள நாடக நடிகர்களை இதில் துணை நடிகர்களாக நடிக்க வைக்க ராஜமவுலி முடிவு செய்துள்ளாராம். அதன்படி கேரளாவில் உள்ள சோர்னுர், ஜானபெரி ஆடிட்டோரியத்தில் கடந்த 15-ம் தேதி ஆடிஷன் நடந்தது. 

(கார்த்திகேயா)

 

Also Read: கேரளாவில் வெள்ளத்தில் மூழ்கிய பிருத்விராஜ் வீடு! 

இதில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதால் ஏராளமான மலையாள நாடக நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆடிஷன் நடத்தியுள்ளார்.

கார்த்திகேயா, ’பாகுபலி’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS