நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு!


கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராமும் அவர் குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கேரளாவில் கனமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 50 வருடத்தில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் 14 மாவட்டங்கள் வெள்ளத் தில் மிதக்கின்றன. மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் கேரள மாநிலம் வெள்ளக்காடாக
மாறியுள்ளது. சாலை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. தண்டவாளங் களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Also Read -> கேரளாவில் வெள்ளத்தில் மூழ்கிய பிருத்விராஜ் வீடு!

மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த மழை வெள்ளத்துக்கு பிரபலங்களின் வீடும் தப்பவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்விராஜின் வீட்டுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. இந்த வீட்டில் இருந்த அவரது அம்மா மல்லிகா சுகுமாறன் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கிய சம்பவமும் நடந்துள்ளது.

Also Read -> அப்பாவுக்காக களத்தில் குதித்த ராஜமவுலி மகன்!

திருச்சூர் மாவட்டத்தில் தனது மனைவி பார்வதி, மகள் மாளவிகா ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார் நடிகர் ஜெயராம். தேசிய நெடுஞ்சாலை 544-ல் குதிரன் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது, திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. மண் சரிந்து சாலையில் விழுந்தது. கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இதில் சிக்கிக்கொண்டன. ஜெயராம் காரும் சிக்கிக்கொண்டது. இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடக்கன்சேரி போலீசார் விரைந்து வந்து அவர்களை பத்திரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS