சிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் ‘எதி’ வெளியானது 


சிம்புவின் ‘செக்கச் சிவந்த வானம்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள திரைப்படம் ‘செக்கச் சிவந்த வானம்’. முதன்முறையாக மல்டி ஸ்டார்களை வைத்து இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கெனவே சிம்பு ‘இந்தப் படம் எனக்கு வழக்கமானதல்ல; உண்மையாக இந்தப் படத்தில் தேவையற்ற பாடல்கள் இருக்காது’என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் சிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிம்பு ஒரு விளையாட்டு வீரரைபோல உடை அணிந்துள்ளார். மேலும் அவரது கதாபாத்திரத்திற்கு ‘எதி’ என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் சேபதிபதியின் பாத்திரமான ‘ரசூல்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அடுத்ததாக சிம்புவின் பாத்திரம் வெளியாகியது. அருண் விஜய்யின் பாத்திரத்திற்கு ‘தியாகு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் த்ரிலராக உருவாகி வரும் இப்படத்தில் அரவிந்த சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், அன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 28 அன்று திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS