“எதிர்பார்க்காமல் வேலையை தொடங்கிவிட்டோம்”- ‘தளபதி63’அட்லீ  


எதிர்பார்த்தோ அல்லது எதிர்பாக்காமலோ ‘தளபதி63’ வேலையை தொடங்கிவிட்டோம் என்று அட்லீ சூசகமாக தெரிவித்துள்ளார். 

‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு விஜய்யின் ‘தளபதி63’ஐ அட்லீதான் இயக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. தற்சமயம் ‘சர்கார்’ படத்தில் தீவிரம் காட்டி வரும் விஜய், அடுத்து  யாருடன் இணைவார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ‘தளபதி63’ புயல் அட்லீயை சுற்றியே மையம் கொண்டுள்ளது. அவரைத் தொடர்ந்து மோகன் ராஜா, வினோத் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க உள்ளதாக பேச்சு அடிப்படுகிறது. அதனை அட்லீ இயக்கப் போவதாகவும் தெரிகிறது. ஆனால் இதனை அந்த நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. முதன்முறையாக இந்தச் சந்தேகங்கள் குறித்து அட்லீ முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். “நான் வழக்கமா பயந்தது கிடையாது. இந்த முறை உண்மையாக சொன்னால் தன்னம்பிக்கை மற்றும் பொறுப்பு கொஞ்சம் கூடியிருக்கு. ஏன்னா நான் பெருசா அல்லது நல்லதா செய்ய  நினைத்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு இந்தப் படம் சம்பந்தமா ஒரு  கரு கிடைச்சிருக்கு. மேலும் எதிர்பார்த்தோ எதிர்பார்க்காமலோ நாங்கள் முன் தயாரிப்பு வேலை செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். ஆகவே விரைவில் அட்லீ படம் பற்றி அறிவிப்பு முறைப்படி வெளியாகலாம் எனத் தெரிகிறது.
 

POST COMMENTS VIEW COMMENTS