கேரளாவுக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதி உதவி


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், கேரள மாநில வெள்ளநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்குகிறார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக, வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத் தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன. மழை வெள்ளம் காரணமாக சுமார் 67 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

Also Read: ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹீரோயின்கள் போட்டி!

இதையடுத்து அந்த மாநிலத்துக்கு தமிழ், தெலுங்கு திரையுலகினர் உதவிகள் செய்துவருகின்றனர். தென்னிந்திய நடிகர் சஙகம், நடிகர்கள்  கம ல், சூர்யா, கார்த்தி, நடிகை ரோகிணி ஆகியோர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர். இந்நிலையில் காரைக்குடியில் ஷூட்டிங்கில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும்,நடிகர் சங்க பொதுசெயலாளருமான நடிகர் விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும் தங்களால் இயன்ற உதவிகளை கேரளாவுக்கு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத் துள்ளார்

POST COMMENTS VIEW COMMENTS