ஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்


 படப்பிடிப்பு தளத்தில் அமலா பால் கையை உடைத்துக் கொண்டதாக தனது ட்விட்டரில் கூறியிருக்கிறார். 

தமிழில் அதிகம் அறியப்பட்ட நடிகை அமலா பால். அவரது முன்னாள் கணவர் ஏ.எல். விஜய்யுடன் விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகு சினிமாவில் படு பிசியாக அவர் நடித்து வருகிறார். தமிழ் மற்று மலையாளம் ஆகிய இருமொழிகளில் அவர் மும்முரமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பெண் மைய கதாப்பாத்திரத்தை கொண்டு உருவாகும் ‘அதோ அந்தப் பறைவைபோல’ படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளதாக தெரிகிறது. அப்போது அவர் சண்டைக்காட்சியில் ஈடுபட்டபோது அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மிக ரிஸ்கான சண்டக்காட்சி என்பதால் அதிக காயம் உள்ளதாக அவரது தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காட்டுப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் அவருக்கு உடனடியாக முதல் உதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவரது பூர்வீகமான மாநிலமான கேரளாவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அந்தக் காயத்தில் இருந்து மீண்டு வருவதாக தெரிய வந்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS