அப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்


நடிகர் அஜித்தின் ‘தக்க்ஷா’ டீமிற்கு அப்துல்கலாம் விருது கிடைத்துள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை கையாளுவதில் அஜித் வல்லவர். தேடிப்பிடித்து தனது டெக்னாலஜி அறிவை அவர் வளர்த்து கொள்வார். அதன் அடிப்படையில்தான் சென்னை எம்ஐடி மாணவர்களின் ‘தக்க்ஷா’ குழுவிற்கு அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மருத்துவ துறைக்கு உதவும் டிரோன் அமைப்பின் Unmanned Aerial Vehicles (UAVs) ஆலோசகராகவும் சோதனை பைலைட்டாகவும் நடிகர் அஜித்குமார் உள்ளார்.

 அவரது கூட்டு முயற்சியில் அவசர காலங்களில் மருத்துவ உதவிக்காக மருந்துகளை ஏற்றிச் செல்ல ஆளில்லா விமானத்தை தயாரிப்பதில் ஈடுப்பட்டது ‘தக்க்ஷா’குழு. அதன்படி அது வெற்றியும் பெற்றது. வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் இவரது குழு பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இன்று சுதந்திர தின கொண்டாட்டத்தின் அடையாளமாக நாட்டிற்கு சேவையாற்றிய பலருக்கு தமிழக அரசு விருதுகளை அளித்து கவுரவித்தது. அதனையொட்டி அஜித்தின் ‘தக்க்ஷா’ குழுவின் கண்டுபிடிப்பிற்கு தமிழக அரசின் ‘அப்துல்கலாம் விருது’ வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாணவர்களின் இந்தச் சாதனைக்கு பக்கபலமாக அஜித் இருந்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS