“ஜெய் எனக்கு ராக் ஸ்டார்” - புகழ்ந்து தள்ளும் ராய் லக்ஷ்மி 


கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ஜெய்யும் நடிகை ராய் லக்ஷ்மியும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

நடிகை ராய் லக்ஷ்மி நடிக்கும் படம் ‘நீயா2’. 1979ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நீயா’ திரைப்படம் பாம்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. பேய்க்கதையாகவும் பழிவாங்கும் பாம்பின் கதையாகவும் வெளியான இப்படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்தத் தலைப்பை வைத்து மீண்டும் ‘நீயா2’ எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ராய் லக்ஷ்மிக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படத்தின் அனுபவம் பற்றி ராய் லக்ஷ்மி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேசியிருக்கிறார். அதில், “நானும் ஜெய்யும் சேர்ந்து நடித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நினைவுகள் என் மனதில் அப்படியே பசுமையாக உள்ளது. இப்போது ‘நீயா2’வில் எனக்கு மிக முக்கியமான கதாப்பாதிரம். ஜெய் எனக்கு ஜோடிகாக வருகிறார். நாங்கள் முதன்முறையாக சந்தித்ததை பற்றி இருவரும் பேசிக்கொண்டோம். நான் அவரை ‘ராக் ஸ்டார்’ என்றுதான் கூப்பிடுவேன். அவர் என்னை ‘மிஸ்வேர்ல்ட்’ என்றுதான் கூப்பிடுவார். 

நாங்கள் ‘வாமனன்’ படத்தில் சேர்ந்து நடித்த புகைப்படங்களை அவர் இன்று அப்படியே மொபைல் போனில் வைத்துள்ளார். அதைக் காட்டிய போது எனக்குப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. நாங்கள் இருவரும் நல்ல நட்பை பரிமாறிக் கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு பொதுவான தளம் உள்ளது. அதில் எப்போதும் தொடர்பில் இருப்போம். அவர் எனக்கு ஒரு இனிப்பான சக நடிகர்” என்று கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS