கிருஷ்ணாவின் ’திரு.குரல்’!


நடிகர் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ’திரு.குரல்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

தமிழில், ’அலிபாபா’, கழுகு, யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், யட்சன் உட்பட பல படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியான இவர், கிரகணம், களறி, கழுகு 2 ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ’திரு.குரல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

'தீதும் நன்றும்' படத்தை அடுத்து என்.ஹெச்.ஹரி, சில்வர் ஸ்கிரின் சார்பில் ஹெச்.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படம் மூலம் பிரபு என்பவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.  'விக்ரம் வேதா' சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கிருஷ்ணா ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயினிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 
விநியோகஸ்தர் சிங்காரவேலன் படத்தை வெளியிட இருக்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS