சினிமாவுக்கும் இன்ஸ்டாகிராமுக்கும் ரெஸ்ட்: பார்வதி முடிவு!


தமிழில், ’பூ’, ‘சென்னையில் ஒரு நாள்’, ’மரியான்’, ‘உத்தமவில்லன்’, ‘பெங்களூர் நாட்கள்’ படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை பார்வதி. கேரள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்படுபவர்.

சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்துள்ள அவர், சினிமாவுக்கும் இன்ஸ்டாகிராமுக்கும் கொஞ்சம் இடைவெளி விட இருப்பதாகத் தெரிவித் துள்ளார்.

இதுபற்றி பார்வதி கூறும்போது, ‘இன்ஸ்டாகிராமில் என்னை பின் தொடர்பவர்களுக்கும் எனது கருத்துகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கும் நன்றி. தொடர்ந்து என்னை ஆதரித்து வருகிறீர்கள். அது என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

இதில் இருந்தும் சினிமாவில் இருந்தும் எனக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகிறது. அதனால் கொஞ்ச காலம் இன்ஸ்டாகிராமுக்கு வரமாட்டேன். பாதுகாப்பாக இருங்கள், அன்பாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார் பார்வதி. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினாலும் பேஸ்புக், ட்விட்டரில் தொடர்ந்து இயங்குவாரா என்பது தெரியவில்லை. 

POST COMMENTS VIEW COMMENTS