வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு சூர்யா 25 லட்சம் நிதி 


கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி 25 லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள்.

கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள். எப்பொழுதும் சூர்யா, கார்த்திக்கும் கேரள மக்களிடம் ஒரு தனி ஈடுபாடு உண்டு. கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம் வருந்துகிறோம். வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்திக்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS